கோவையில் விஜய் காரை நெருங்க நினைத்து விபத்தில் சிக்கிய தவெக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் அடாவடி செய்த தவெக தொண்டர்கள் மீது 2 பிரிவுகளில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக கருத்தரங்கில் பங்கேற்க விஜய் வந்தபோது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் பயணிகளுக்கு இடையூறு, தடுப்புகள் உள்ளிட்டவற்றை உடைத்த சம்பவங்களுக்காகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார், பைக் உட்பட 133 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளது.
கோவையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோவையில் 9.67 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான விழா கோவை ஆர் எஸ் புரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். 29 கோடியே 99 லட்சத்தில் முடிவுற்ற 64 திட்டங்களை தொடங்கி வைத்த உதயநிதி, மேலும், 82 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் 132 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழாவில் உதயநிதி ஸ்டாலின், “கோவைக்கு எப்போது வந்தாலும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. திராவிட மாடல் என்றாலே எல்லோருக்கும் எல்லாம், இதற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் தேவையானவற்றை அறிந்து அரசு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கான விடியல் பயணம் முதலமைச்சர் முதல் கையெழுத்திட்டார். 700 கோடி பயணங்களை கட்டணமில்லாமல் மகளிர்கள் சென்றுள்ளார்கள். உயர்கல்வி படிக்கும் மூன்று லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 3.50 லட்சம் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, 21 லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெற்று வருகின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். ஆகையினால் இதில் கூடுதலாக மகளிர்கள் பயன் பெறுவார்கள்.
மகளிர் சுய உதவி குழு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது் பணிக்கு சென்ற மகளிர் இன்று தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். திராவிட மாடல் அரசின் முயற்சியினால், பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்களில் 43 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். 13 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்கு வர உள்ளனர். இந்தியாவிலேயே முன்னிலை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இந்த அரசு என்றும் மக்களுக்கு பக்க பலமாக இருக்கும். இந்த அரசுக்கு மக்களும் பக்க பலமாக துணை நிற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
‘ரெட்ரோ’ பட விழாவில் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார் நடிகை சூர்யா.
சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் சூர்யா. இதன் தெலுங்கு விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் நாக வம்சி, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
எம்.சாண்ட், பி-சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலையை ரூ.1,000 குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
எம்-சாண்டு, பி சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றுக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய வேண்டும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 நிர்ணயம் செய்ய வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் வெள்ளிக்கிழமை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு கனிமவளத் துறையின் வருவாயை பெருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவறுத்தினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 3 வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. ஆகவே 27-04-2025 மற்றும் 28-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 29-04-2025 முதல் 02-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 03-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட சோதனை ஓட்டம் வரும் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் 63,246 கோடி மதிப்பில், மூன்று வழித்தடங்களில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. அதில் 4வது வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கி.மீ தொலைவின் ஒரு பகுதியான பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில். கடந்த 20 ஆம் தேதி முதன்முறையாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையிலான 2.5 கி.மீ தொலைவிற்கு 25 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளபட்டது. இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூர் வரை மொத்தம் 9.1 கி.மீ தொலைவிற்கான முழு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது அதன்படி நாளை இந்த சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த முறை 25 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்ட நிலையில் இந்த முறை மணிக்கு 35-40 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.
சென்னை அரக்கோணம் மார்க்கத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு, கோவை, திருவனந்தபுரம், மும்பை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விரைவில் ஆனது இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அரக்கோணம் சென்னை இடையே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கு மேற்பட்ட மின்சார ரயில்களானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய முன்தினம் அரக்கோணம் அடுத்த திருவலாங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாள இணைப்புகள் இணையும் இரு வேறு இடங்களில் இணைப்புகளில் உள்ள போல்ட் நெட்டுகளை மர்ம நபர்கள் கழட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை ஆவடி வழித்தடத்தில் பட்டறை வாக்கம் பகுதியிலும் இணைப்புகளில் ஜல்லிகல் வைக்கப்பட்டுள்ளது.இன்று காலை சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திலும் இணைப்புகளில் இரும்பு கம்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரக்கோணம்- காஞ்சிபுரம் மார்க்கமாக செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் தண்டவாள இணைப்பு பகுதியில் ஜல்லிக்கட்டு வைத்து ரயிலை கவிழ்க்க சதித்தமானது நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இதேபோல் சென்னை அம்பத்தூர் – பட்டரவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் கற்கள் கிடந்தன. ரயில் பாதையை மாற்றும் தண்டவாளங்களின் குறுக்கே அதிகளவில் கிடந்த கற்களை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் தண்டவாள இணைப்பு பகுதிகளை தற்போது மும்முறமாக சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கவரைப்பேட்டை ரயில் சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமும் ரயில் தண்டவாளை இணைப்புகளில் போல்ட் நெட்டுக்கள் கழட்டியதால் நடைபெற்றது. அதுகுறித்து NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சென்னை அரக்கோணம் பரபரப்பாக இருக்கக்கூடிய இந்த வழித்தடத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நடு சாலையில் கட்டிலை போட்டு 90 வயது மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பூத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தியம்மாள் (90).இவருக்கு முருகேசன் ,கோவிந்தன் என்ற இரு மகன்களும், வள்ளியம்மா என்ற மகளும் உள்ளனர்.மூவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 50 வருடங்களுக்கு முன்னரே மூதாட்டியின் கணவர் இறந்து விட்டதால் பாப்பாத்தியம்மாள் பூத்துப்பட்டி கிராமத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் வயது மூப்பின் காரணமாக , தன்னை கவனித்துக் கொள்ள முடியாமல் பெற்ற மகனையும் ,மகளையும் நாடிச் சென்றுள்ளார். இரு மகன்கள் மற்றும் மகள் வீட்டிலும் என சிறிது காலத்தை கழித்து வந்த நிலையில் கடந்த மாதம் மூதாட்டியின் இளைய மகனான கோவிந்தராஜ் மூதாட்டியை பணிவடை செய்து கவனிக்க முடியாமல் பூத்துப்பட்டி கிராம சாலையில் பொட்டி ,படுக்கையுடன் ஆட்டோவில் கொண்டு வந்து இரவு நேரத்தில் சாலையின் ஓரம் இறக்கி விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் பாப்பாத்தியம்மாள் இரவு முழுவதும் அலறி துடித்துள்ளார்.அடுத்தநாள் காலை அவ்வழியாகச் சென்ற அந்தகிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் என்பவர் மூதாட்டியை மீட்டு கடந்த ஒரு மாதமாக அடைக்கலம் தந்து உணவு அளித்து வந்துள்ளார். தற்போது அதிக வயது மூப்பின் காரணமாகவும், பெற்ற பிள்ளைகளிடையே சேர வேண்டும் என்ற பாசத்திலும் மூதாட்டியின் வேண்டுகோளின் படி, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மூதாட்டியை பிள்ளைகளிடம் சேர்க்க வலியுறுத்தி மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகார் அளித்தும் மகேந்திரமங்கலம் காவல்துறையினர் கடந்த ஒரு மாதமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், மூதாட்டியை பெற்ற பிள்ளைகளுடன் சேர்க்க கோரி திடீரென இன்று மதியம் வெள்ளிச்சந்தை நான்கு ரோடு பகுதியில் கட்டில் போட்டு மூதாட்டியுடன் ஊர் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மகேந்திரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை பிள்ளைகளுடன் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மூதாட்டியை பிள்ளைகளுடன் சேர்ப்பதாக உறுதி கூறியதை தொடர்ந்து கலைந்து பொதுமக்கள் சென்றனர்.பெற்ற தாயை பாரமாக கருதி நடு ரோட்டில் மகன்கள் விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவையில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக கோவை சென்றடைந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், அவினாசி ரோட்டில் ரோடு நடத்தினார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்வதற்கா சென்றஅக்கட்சியின் தலைவர் விஜய், இரண்டாம் நாளாக இன்றும் ரோடு ஷோ நடத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று மதியம் அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் விஜயை வரவேற்க அக்கட்சி தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விஜய் விமான நிலையத்திலிருந்து தனது வாகனத்தின் ஏறி தொண்டர்களை பார்த்து கையை அசைத்தவாறு சென்றார். அப்போது விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை வழிநெடுக காத்திருந்த தொண்டர்கள் விஜயை மேளதாளங்களுடன் வரவேற்றனர். 3 மணியளவில் சரவணம்பட்டி பகுதியில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் விஜய் கலந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தல் களப்பணிகள் குறித்து தொண்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தேர்தல் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கோவையில் இன்று 2வது நாளாக நடைபெறும் தமிழக வெற்றிக்கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் புறப்பட்டார். வழி நெடுகிலும் ரசிகர்கள் வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தில் சென்ற விஜய், தொண்டர்களை பார்த்து கையசைத்து உற்சாகம் மூட்டினார்.