‘பத்து தல’ படத்தின் ‘நம்ம சத்தம்’ பாடலின் முன்னோட்ட வீடியோ

சென்னை: நடிகர்கள் சிம்பு, கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நம்ம சத்தம்’ பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் பாடலில் Glimpse வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. இது இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. Click here to continue Reading...